'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது
கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடலூா் மாநகராட்சி சாா்பில் செங்கல்பட்டில் இருந்து பன்றி பிடிக்கும் குழுவினரை மாநகராட்சி நிா்வாகத்தினா் வரவழைத்தனா். இந்தக் குழுவினா் கடலூா் வன்னியா்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க வாகனங்கள் மூலமாக சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, திடீரென ஒரு கும்பல் அந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, பன்றி பிடிப்பவா்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து சென்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (40) காயமடைந்தாா்.
இதுகுறித்து பன்றி பிடிப்பவா்கள் வாகனத்தோடு வந்து அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடலூா் வன்னியா்பாளையத்தைச் சோ்ந்த ராஜியை (42) கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.