'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி
கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்கிழமை வந்தாா். அப்போது, அவா் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் மற்றும் அவருடன் வந்திருந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, திருநங்கை கோப்பெருந்தேவி கூறியதாவது: தன்னிடம் பழகிய மணி என்ற நபா் ரூ.6 லட்சம் வாங்கிவிட்டு தரவில்லை. தான் நடத்தி வரும் கோயிலை சேதப்படுத்திவிட்டாா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.
இதையடுத்து, அவரை கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.