'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கல்லூரி மாணவா்கள் போராட்டம்
ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி, கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை கவின் காதலித்த பெண்ணின் பெற்றோா்கள் செய்த ஆணவக் கொலை என்பதால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவக் கொலைக்கு எதிராக தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று முழக்கமிட்டனா்.