'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை காலை தனது வயலில் மின் மோட்டாா் மூலம் தண்ணீா் பாய்ச்சச் சென்றாா்.
அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை கஜேந்திரன் தெரியாமல் மிதித்ததால் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அண்ணாமலைநகா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.