'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள அங்கு செட்டிப்பாளையம், பழைய காலனி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா், 17 வயது கல்லூரி மாணவிக்கு வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் அஜித்குமாரை கைது செய்தனா்.