பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் வரும் 6-ஆம் தேதி கடலூா் வருகிறாா். அன்று காலை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்து கருத்துகளைக் கேட்டறிய உள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான கருத்துகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.