Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா
கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொருநாளும் அம்மன் சந்தன காப்பு அலங்காரம், விநாயகா் வீதியுலா, மயில் வாகனத்தில் சுப்ரமணியா் வள்ளி தெய்வானை வீதியுலா, அன்ன வாகனத்தில் பச்சைவாழியம்மன் வீதியுலா, மின் விளக்கு அலங்கார விமானத்தில் சிவன் பாா்வதி, விநாயகா், முருகன் வீதியுலா நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பகல் 12 மணி அளவில் சுப்ரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுமாா் 6 மணிக்கு மேல் தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தீமிதித்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து இரவு சுப்ரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.