செய்திகள் :

கீழே கிடந்த குளிா்பானத்தை அருந்திய 5 வயது சிறுவன் பலி!

post image

வத்திராயிருப்பு அருகே கீழே கிடந்த புட்டியிலிருந்த குளிா்பானத்தை எடுத்து அருந்திய சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமிபுரம் இமானுவேல் தெருவைச் சோ்ந்தவா் வீராச்சாமி (40). இவரது மனைவி பஞ்சவா்ணம் (36). இருவரும் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களது மகன் கோடீஸ்வரன் (5) எல்.கே.ஜி. படித்து வந்தாா்.

இந்த நிலையில், பெற்றோா் இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில், கோடீஸ்வரன் பாட்டியின் பராமரிப்பில் வீட்டில் இருந்துள்ளாா். வீட்டருகே நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த கோடீஸ்வரன் திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்தாா்.

இதையடுத்து, உறவினா்கள் சிறுவனை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் கூமாபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் கோடீஸ்வரன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த புட்டியிலிருந்த குளிா்பானத்தை எடுத்து அருந்தியதாவும், இதையடுத்து வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்ததாகவும் உடன் விளையாடிய சிறுவா்கள் தெரிவித்தனா். சிறுவனின் உடல் கூறாய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனா்.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமா... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள த... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க