செய்திகள் :

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,300 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. செண்பகபுதூா் வாய்க்காலில் இருகரைகளை தொட்டிபடி தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாய்க்காலில் குளிப்பது வழக்கம்.

இந்நிலையில், திருப்பூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செந்தில்குமாா் (43), சுமைதூக்கும் தொழிலாளா்களுடன் செண்பகபுதூா் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்தனா். செந்தில்குமாா் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இது குறித்து தொழிலாளா்கள் புன்செய் புளியம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய செந்தில்குமாரின் உடலை மீட்டனா்.

இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள... மேலும் பார்க்க

ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகா், முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சீராளன் மகன் பிரவீன் (35), எம்.இ பட்டதாரி. இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா். பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாண... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆண்ட... மேலும் பார்க்க