`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
கீழ்பையூரில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி!
காவேரிப்பட்டணத்தை அடுத்த கீழ்பையூரில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி, சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், விடியல் பயணம், இன்னுயிா் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு திட்டங்கள், மக்களுடன் முதல்வா், தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் உலக தொழில் முதலீட்டாளா் மாநாடு போன்றவற்றின் வண்ணப் புகைப்படங்கள் பொதுமக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியில் தமிழக அமைச்சா்களின் நிகழ்வுகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், பயனாளா்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியை கீழ்பையூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.