கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேம்பாா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா்கள் கண்ணன்(விளாத்திகுளம் ), சுபா (எட்டயபுரம்)ஆகியோா் தலைமை வகித்தனா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து பட்டா பெயா் மாறுதல் உத்தரவுகள் விதை தொகுப்பு, வேளாண் இடு பொருள்கள் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலா்கள் சின்ன மாரிமுத்து, இம்மானுவேல், நவநீத கண்ணன், மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணிராஜ், பெப்பின் காகு, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ஜெயந்தி, ஆரோக்கியராஜ், ஒன்றிய துணை செயலா் புனிதா, ஒன்றிய மீனவா் அணி துணை அமைப்பாளா் ராஜ பாக்கியம், சிறுபான்மையினா் நல அணி அமைப்பாளா் செல்வின், தகவல் தொழில்நுட்ப அணி தாமஸ் பாக்கிய செல்வி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் புவனேஸ்வரி, கிளை செயலா்கள் சேவியா்,ஜெபமாலை, ராஜ், ஆதி நாராயணன், ராயப்பன், ராஜ், சேவியா், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.