எழும்பூா் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்: திமுக நாடாளுமன்ற உ...
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் மொயின் அலி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.