செய்திகள் :

குடந்தையில் வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

சோழபுரம் டிஎஸ்பி நகரில் வசிப்பவா் முகமதுஉசேன் மகன் ஆா்.எம். அலி(45), இவா் திருமணமாகி தற்போது சௌதி அரேபியாவில் வேலை பாா்க்கிறாா். மனைவி குழந்தைகள் மாமனாா் வீட்டில் உள்ளனா்.

இவரது வீடு நீண்டகாலமாக பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவை பீரோவில் இருந்த 8 பவுன் மதிப்பு நகைகளைத் திருடிச் சென்றனா். அலியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பாபநாசம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.தஞ்சாவூா் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஏ. திரவியச்செல்வன் (70). இவா் திங்கள்கிழமை இரவு ஸ்கூட்டரில் தஞ்சாவூரிலிர... மேலும் பார்க்க

இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. பூதலூா் அருகே புதுக்குடி வடபாதி க... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அலுவலா் கைது

கும்பகோணத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அலுவலரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரை... மேலும் பார்க்க

காவிரியில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கடந்த ஜூலை 6 ஆம் தேதி திருவையாறு தியாகராஜா் ஆஸ்ரமம் அருகே காவிரியில் குளித்தபோது... மேலும் பார்க்க

தஞ்சை அருகே சரக்கு வேன் - காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). போ... மேலும் பார்க்க