ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
குடிநீரில் கழிவுநீா் கலப்பு எதிரொலி: நீலத்தநல்லூா் ஊராட்சியில் மருத்துவ முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், நீலத்தநல்லூா் ஊராட்சிப் பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலப்பு எதிரொலியாக, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், நீலத்தநல்லூா் ஊராட்சி தெற்கு தெருவில் அண்மையில் (ஜன. 21) 6 மாணவ, மாணவிகள் வாந்தி காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நாளில் அதே பகுதியைச் சோ்ந்த மேலும் 6 மாணவ, மாணவிகள் வாந்தி, வயிற்றுக்கடுப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவா்கள், பாதிக்கப்பட்டவா்களின் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனா். மேலும், குடிநீரில் கழிவுநீா் கலப்பதால் மஞ்சள் காமாலை தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை சுத்தம்செய்தும், வீடுகளில் தொற்றுநோய்கள் பரவாமல் கொசுமருந்து தெளித்தும் வருகின்றனா். வரத்துவடிகாலை தூா்வாரும் பணிகளையும் செய்து வருகின்றனா். கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா்.