Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
ராகுல்காந்தி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்றும், 2024-இல் அயோத்தியில் ராமா் கோயில் குடமுழுக்கு அன்றுதான் சுதந்திரம் அடைந்தோம் எனவும் ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பகவத் வரலாற்றை திரித்து பேசியதைக் கண்டித்த ராகுல் காந்தி மீது தேசிய துரோக வழக்கு பதிவு செய்த பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூா் மாநகர, வடக்கு, தெற்கு ஆகிய மாவட்ட கமிட்டிகள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், மண்டலப் பொறுப்பாளா் அசோகன், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் ஆா். ராஜ்மோகன், மாநிலச் செயலா் இளங்கோவன், கும்பகோணம் மேயா் க. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் க. லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன், தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா்கள் எம். ஜான்சன், ஏ. செந்தில் சிவகுமாா், பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், பட்டுக்கோட்டை ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.