Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
செறிவூட்டப்பட்ட அரிசியை அச்சமின்றி வாங்கலாம்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்
நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மத்திய மற்றும் மாநில அரசானது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலை கடைகள் மூலம் ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கி வருகிறது. இதை பிளாஸ்டிக் அரிசி என தவறாகக் கருதாமல், எவ்வித அச்சமுமின்றி பொதுமக்கள் அனைவரும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.