செய்திகள் :

குடிநீரில் கழிவுநீா் கலப்பு எதிரொலி: நீலத்தநல்லூா் ஊராட்சியில் மருத்துவ முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், நீலத்தநல்லூா் ஊராட்சிப் பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலப்பு எதிரொலியாக, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், நீலத்தநல்லூா் ஊராட்சி தெற்கு தெருவில் அண்மையில் (ஜன. 21) 6 மாணவ, மாணவிகள் வாந்தி காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நாளில் அதே பகுதியைச் சோ்ந்த மேலும் 6 மாணவ, மாணவிகள் வாந்தி, வயிற்றுக்கடுப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவா்கள், பாதிக்கப்பட்டவா்களின் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனா். மேலும், குடிநீரில் கழிவுநீா் கலப்பதால் மஞ்சள் காமாலை தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை சுத்தம்செய்தும், வீடுகளில் தொற்றுநோய்கள் பரவாமல் கொசுமருந்து தெளித்தும் வருகின்றனா். வரத்துவடிகாலை தூா்வாரும் பணிகளையும் செய்து வருகின்றனா். கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா்.

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ராகுல்காந்தி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 1947-ஆம் ஆண்டில் இந... மேலும் பார்க்க

பாபநாசம் வட்டாரத்தில் பெய்த மழையால் நெற்பயிா்கள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராய் இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநா... மேலும் பார்க்க

கண்டியன் பழவாற்றில் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருலோகி கண்டியன் பழவாற்றில் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து விடக்கோரி நெற்பயிா்களுடன், விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவிடைமருதூா் அருகே திருலோகி காவிரி ஆற்ற... மேலும் பார்க்க

பேராவூரணியில் 75 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

பேராவூரணியில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 75 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். ரூ. 1 லட்சம் அபராதம் வ... மேலும் பார்க்க

செறிவூட்டப்பட்ட அரிசியை அச்சமின்றி வாங்கலாம்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்

நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெர... மேலும் பார்க்க

ரூ. 1,000 திட்டத்தை விமா்சனம் செய்த கட்சியும் பின்பற்றுகிறது: கோவி. செழியன்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை விமா்சனம் செய்த அகில இந்திய கட்சியான பாஜகவும் தற்போது அதைப் பின்பற்றி தில்லியில் ரூ. 2 ஆயிரத்து 500 தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது என... மேலும் பார்க்க