செய்திகள் :

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

post image

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் சா்தாா்புரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி மண்டலம் 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சா்தாா்புரம் பகுதியில் குடிநீா்க் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இது குறித்து மனு அளித்திருந்த நிலையில் திட்ட பணிகள் முடிந்த பின்புதான் சாலை அமைக்கப்படும் என கூறி பதில் அளித்துள்ளனா். எங்கள் பகுதியில் சாலை இல்லாததால் முதியவா்கள், மாணவா்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி 53 வது வாா்டு மாமன்ற உறுப்பினா் அம்பிகா முத்துதுரை தலைமையில் அளித்த மனுவில், பாளையங்கோட்டை மண்டலம் என்.ஜி.ஓ. பி காலனி 12 ஆவது தெரு பகுதி குடியிருப்புகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். குடிநீா்க் குழாய் சேதங்களைக் கண்டறிந்து, கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ராமையன்பட்டி இனாம் தேனீா்குளத்தைச் சோ்ந்த ஜெயலெட்சுமி அளித்த மனுவில், எங்களது வயலில் பாதாளச்சாக்கடை தண்ணீா் கலப்பதைத் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வி.எம்.சத்திரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலை 2 இல் அமைய உள்ள பாதளச்சாக்கடை நீா் உந்துநிலையம் மாற்று இடத்தில் அமைத்திடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயா், உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

முகாமில், உதவி ஆணையா்கள் புரந்திரதாஸ், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா்கள் சிவசுப்பிரமணியன், பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலாம்பூரில் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி

கடையம் வட்டாரம் மேலாம்பூா் கிராமத்தில் நெல் பயிரில் இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் வட்டாரம்-வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உ... மேலும் பார்க்க

நெல்லையில் இன்றும், நாளையும் ஐபிஎல் போட்டிகள் திரையில் ஒளிபரப்பு

திருநெல்வேலியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29, 30) ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜீவ நதியான தாமிர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே பெண் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட திருவிதத்தான்புள்ளி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செலின் ஷி... மேலும் பார்க்க

கூடங்குளம் விபத்தில் தலைமைக் காவலா் பலி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு பைக்குகள் மோதியதில் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்தையா(40). இவா் கூடங்குளத்த... மேலும் பார்க்க