போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
குடிநீா்ப் பிரச்னை: ஊத்துப்பட்டி கிராமத்தினா் கோரிக்கை
ஊத்துப்பட்டி கிராமத்திற்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக வடக்கு மாவட்ட செயலா் வேல்ராஜா தலைமையில் அக் கிராமத்தினா் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி, குமாராபுரம் கிராமங்களில் சுமாா் 600 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனா். இக் கிராமத்தினருக்கு உள்ள உள்ளூா் நீராதாரம் அன்றாட பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை.
எனவே, சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் ஊத்துப்பட்டி கிராமத்திற்கு இணைப்பு ஏற்படுத்தி குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளனா்.