எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல்: இந்தியா பதிலடி!
குடிநீா் கேட்டு சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீரில் மாசுகள் கலந்து வருவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கும்பகோணம் - திருவையாறு பிரதான சாலையில் பெருமாள்கோயில் ஊராட்சி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற கபிஸ்தலம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதனையடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.