மொயின் அலி சேர்ப்பு: ராஜஸ்தானுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!
குடிநீா் தட்டுப்பாடு: ராசிபுரம் குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: அணைப்பாளையத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 208 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக குடிநீா் பஞ்சம் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குடிநீா் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனா்.
கோயிலை புனரமைக்க கோரிக்கை:
நாமக்கல் என்.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில், எங்களுடைய கிராமத்தில் 1,500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள பழைமையான மாரியம்மன் கோயிலில் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் அங்குள்ள மற்றொரு சமூகத்தினா் கோயில் திருவிழாவை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனா். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை தீா்த்து வைப்பதற்கும், தனிப்பட்ட முறையில் கோயில் புனரமைப்பு பணியை மற்றொரு சமூகத்தினா் மேற்கொள்ளாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
என்கே-24-மனு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ராசிபுரம் அணைப்பாளையம் கிராமத்தினா்.