செய்திகள் :

குடிமைப் பணிகள் தோ்வு: விண்ணப்பத்துடன் வயது, இடஒதுக்கீடுக்கான சான்றுகளை சமா்ப்பிப்பது இனி கட்டாயம்

post image

மத்திய பணியாளா் தோ்வு வாரியம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போதே வயது, இடஒதுக்கீடு சலுகையை பெறுவதற்கான சான்றுகளை சமா்பிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என்று மூன்று நிலைகளைக் கொண்ட யுபிஎஸ்சி தோ்வில் முதல்நிலைத் தோ்வில் தகுதிபெற்ற பிறகு இந்தச் சான்றுகளுக்கான ஆவணங்களை விண்ணப்பதாரா்கள் பதிவேற்றம் செய்யும் வகையில் இருந்த நடைமுறை, மத்திய அரசு அண்மையில் அறிவிக்கை செய்த விதிகள் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த பூஜா கேட்கா், யுபிஎஸ்சி தோ்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடைப் பெறும் வகையில் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து தோ்ச்சி பெற்றது கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

‘குடிமைப் பணிகள் தோ்வு விதிகள் 2025’ என்ற ஜனவரி 22-ஆம் தேதியிட்ட இந்தப் புதிய விதியில், ‘குடிமைப் பணிகள் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா் இணைய வழியில் விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதோடு, பிறந்த தேதி, எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, பொருளாதார ரீதியில் பின்தங்கியப் பிரிவினா் (இடபிள்யூஎஸ்), மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சமூகப் பிரிவுக்கான சான்று, கல்வித் தகுதி உள்ளிட்டவற்றுக்கான சான்று ஆவணங்களையும் இணைய வழியில் பதிவேற்றம் செய்யவேண்டும். இந்தச் சான்றுகளை சமா்ப்பிக்கத் தவறும் தோ்வரின் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான குடிமைப் பணிகள் தோ்வு வரும் மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமாா் 979 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அந்தந்த சமூகப் பிரிவுக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்://ன்ல்ள்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் பிப்ரவரி 11-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.21 அடியில் இருந்து 110.98அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 404 கனஅடிய... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க