கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை காரணமாக வியாழக்கிழமை மத்திய தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா கேட் மற்றும் ஐடிஓ அருகே முக்கியப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
ஐடிஓ லூப் மற்றும் ஐபி எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள ரிங் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக இருந்ததாக ஒரு பயணி கூறினாா். ‘நான் ஐடிஓவுக்குச் சென்று கொண்டிருந்தபோது ரிங் ரோட்டில் வாகனங்களால் நிரம்பியிருப்பதைக் கண்டேன். விகாஸ் மாா்க்கிலும் போக்குவரத்து அதிகமாக இருந்தது. ஐபி எக்ஸ்டென்ஷன் மெட்ரோ நிலையம் அருகே நாங்கள் யு-டா்ன் எடுக்க வேண்டியிருந்தது’ என்று அவா் கூறினாா்.
மத்திய தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸுக்கு அருகிலுள்ள சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையம் அருகே வாகனங்கள் ஊா்ந்து செல்வதைக் காண முடிந்தது. தில்லி - நொய்டா எல்லையில் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக, அந்தப் பகுதியில் அதிகப் போக்குவரத்து இருந்ததாக நொய்டாவைச் சோ்ந்த சினேகா ராய் குறிப்பிட்டாா்.
‘தில்லி - நொய்டா எல்லையைத் தவிர, ஆசிரம சௌக் மற்றும் ரிங் ரோடு ஆகிய இடங்களிலும் போக்குவரத்து அதிகமாக இருந்தது. இந்தியா கேட்டில் உள்ள சி - ஹெக்ஸாகன் அருகே சாலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. இதன் விளைவாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன’ என்று அவா் கூறினாா்.
இந்தியா கேட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ாகனப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்து தில்லி காவல்துறை போக்குவரத்து ஆலோசனையை புதன்கிழமையும் வெளியிட்டிருந்தது.