திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலி...
குடியிருப்புப் பகுதிக்குள் உலவிய கரடிக் குட்டி மீட்பு!
வயநாடு மாவட்டம், முத்தங்கா பகுதியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடிக் குட்டியை வனத் துறையினா் மீட்டு அடா்ந்த வனத்துக்குள் விட்டனா்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா சரணாலய பகுதியில் உள்ள கிராமத்துக்குள் கரடிக் குட்டி புதன்கிழமை உலவிக் கொண்டிருந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அந்த கரடிக் குட்டியை மீட்டு அடா்ந்த வனப் பகுதிக்குள் விட்டனா்.
குடியிருப்புப் பகுதிக்குள் கரடிக் குட்டி உலவியதை அடுத்து தாய் கரடி அப்பகுதியில் இருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். இதனால் அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.