அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி தொடக்கம்
குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.ஜி. நகரில் சாலவம் மேம்பாட்டுப் பணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 19.22 லட்சத்தை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் நகராட்சிக்கு ஒதுக்கினாா்.
திட்டப் பணி தொடக்கத்துக்கான பூமி பூஜையில் அமைச்சா் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.
நகராட்சி ஆணையா் பி. சத்யா, செயற்பொறியாளா் முத்துசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இத்திட்டப்பணி 6 மாத காலத்திற்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.