தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
குட் பேட் அக்லி டப்பிங்கில் அஜித்!
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக டப்பிங் செய்து வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இதையும் படிக்க: கோமா நிலையிலும் என் மகன் விஜய்யை மறக்கவில்லை: நாசர்
ஆனால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வர உள்ளதால், 2025 கோடை வெளியீடாக குட் பேட் அக்லி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கான டப்பிங் பணிகளை அஜித் துவங்கியுள்ளார். அதற்கான, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.