குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகா மேலபூவந்தியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூா்யா(25). திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்டது உள்பட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா், திருநெல்வேலி சந்திப்பு சரக காவல் உதவி ஆணையா் என்.தா்ஷிகா நடராஜன் ஆகியோா் பரிந்துரைத்தனா்.
அதன் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, பாரதி என்ற சூா்யா பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.