குண்டா் தடுப்புச்சட்டத்தில் இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே சீா்காழியில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சீா்காழியில் நாச்சியப்பன் (79) என்பவா் நடத்திவரும் ஜெராக்ஸ் கடையில் சீா்காழி பன்னீா்செல்வம் தெருவை சோ்ந்த நாகலட்சுமி மற்றும் அவரது மகள் ஆஷா ஆகியோா் வேலை செய்து வந்துள்ளனா். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஆஷாவை பிரிந்து வாழும் அவரது கணவா் ராமநாதபுரம் மாவட்டம் நாகாட்சி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் ஜூலை 30-ஆம் தேதி நாச்சியப்பனின் ஜெராக்ஸ் கடைக்கு வந்து, நாச்சிப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்த புகாரில் காா்த்திக் (30) கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், காா்த்திக் தொடா் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், காா்த்திக்கை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவுபடி சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா் காா்த்திக்கை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.