Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் ...
குத்தாலத்தில் மாா்ச் 14-ல் வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை: குத்தாலத்தில் வரும் மாா்ச் 14-இல் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் குத்தாலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
தனியாா்துறை நிறுவனங்களில் வேலைதேடும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம். கூடுதல் விபரங்களுக்கு 04364-299790/9499055904.