குபேரா வெளியீடு எப்போது?
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தன.
இதையும் படிக்க: கேம் சேஞ்சர்: 5 பாடலுக்கு ரூ. 75 கோடி பட்ஜெட்!
தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் உருவாகும் குபேரா திரைப்படத்தை ஜூன் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் ராயன் மிகப்பெரிய வெற்றது. இதற்கடுத்து அமரன் இயக்குநர் படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் 2 படங்களை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.