இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவே...
குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்
தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தலைமையில் நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் தேனி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், அரசு நலத் திட்ட உதவி, விபத்து நிவாரணம், புதிய குடும்ப அட்டை, அடிப்படை வசதி, போக்குவரத்து வசதி, கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.