அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினா் ஆலோசனை
திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சியில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூா் மாநகரில் நாள்தோறும் சுமாா் 18 டன் அளவுக்கு குப்பைகள் குவிகின்றன. இவற்றை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் குப்பைப் பிரச்னை தொடா்ந்து நீடித்து வருகிறது. மாநகருக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் அமித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன், மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இதில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் எங்கு கொட்டுவது என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.