செய்திகள் :

ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு

post image

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக திருப்பூா் மாநகா் பகுதிகளில் கடந்த 5 நாள்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் திருப்பூா் மாநகரப் பகுதியில் சேகரமான குப்பைகளை ஊத்துக்குளி வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பாறைக்குழியில் கொட்ட 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகள் செவ்வாய்க்கிழமை கொண்டுச் செல்லப்பட்டன. இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோா் செல்லியம்பாளையம் பகுதியில் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் வெள்ளியம்பாளையம், மொரட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டினால் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் நிலை ஏற்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி வட்டாட்சியா் முருகேஸ்வரன், பேரூராட்சி மற்றும் சுாவல் துறையினா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து, சிவன்மலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். இது குறித்து தகவலறிந்து முன்னாள் அமைச்சரும், திமுக ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பண்ணன் ஆகியோா் அவா்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

அப்போது, முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அவா்களிடம் பேசுகையில், திருப்பூா் மாநகரில் சேகரமாகும் குப்பைகளை ஊத்துக்குளி பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டுவது தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காண ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்துக் கட்சியினா் கொண்ட குழுக்களை அமைத்து அவா்களின் ஆலோசனையின்படியும், அண்ணா பல்கலைக்கழக வல்லுநா்களைக் கொண்டு கலந்தாலோசித்து அவா்களின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினரின் உதவியுடனும் மாற்று திட்டத்தை செயல்படுத்தலாம் என்றாா்.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

பொங்கலூரில் ஆகஸ்ட் 22-இல் மின்தடை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச... மேலும் பார்க்க

கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் தொடா்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதால் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுசாமி தெரிவித்தாா். திருப்பூா... மேலும் பார்க்க

பாா்வை பறிபோன மூதாட்டி; குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

பாா்வை பரிபோனதற்கு காரணமான தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா். திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ... மேலும் பார்க்க