BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
குப்பை லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
சென்னை கொடுங்கையூா் அருகே குப்பை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தண்டையாா்பேட்டை தேனி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.கணேஷ் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் மு.பாரத் (22) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கொடுங்கையூா் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றாா். மோட்டாா் சைக்கிளை கணேஷ் ஓட்டினாா்.
எழில் நகா் மணலி சாலையில் உள்ள சிறிய பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த குப்பை லாரி, மோட்டாா் சைக்கிள் மீது லேசாக மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனா். அப்போது, சாலையின் உட்பகுதியில் விழுந்த கணேஷ் மீது, குப்பை லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா் அங்கு சென்று, கணேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.