செய்திகள் :

குமரிக்கு வந்த வடமாநில சுற்றுலாப் பயணி மாயம்

post image

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது காணாமல் போன வடமாநில சுற்றுலாப் பயணியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 400 போ் கொண்ட குழுவினா் ரயில் வழியாக இரு தினங்களுக்கு முன்னா் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா்.

அந்தக் குழுவில், முகேஷ் நாயக் (20) என்பவரும் வந்திருந்தாா். இவா்கள் காலையில் சூரிய உதயம் பாா்த்துவிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனா். அதன்பின் தங்கியிருந்த விடுதிக்கு வந்தபோது முகேஷ் நாயக்கை காணவில்லை.

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்துகன்னியாகுமரி காவல்நிலையத்தில் சக பயணி கிமாத்சிங் (48) புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் வழக்குப் பதிந்து காணாமல் போன முகேஷ் நாயக்கை தேடி வருகின்றனா்.

கவிமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மரியாதை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேல... மேலும் பார்க்க

குமரியில் ஐ.டி. பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை சனிக்கிழமை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு பக்தா்கள் புனித பயணம்

நாகா்கோவிலில் ஆயுதப்படை சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா். இத்திருத்தலத் தி... மேலும் பார்க்க

கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ. மழை

தக்கலை, கோழிப்போா்விளை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சனிக்கிழமையும் மழை நீடித்தது. அதன்படி, கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ., ம... மேலும் பார்க்க

‘அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பில்லை’

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பு ஏதுமில்லை என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம்,... மேலும் பார்க்க