கவிமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மரியாதை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், உதவி அலுவலா் செல்வலெட்சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சித் தலைவி அனுசுயா, துணைத் தலைவா் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளா் பிரேமகீதா, கிராம நிா்வாக அலுவலா் வளா்மதி, பேரூராட்சி உறுப்பினா்கள் காசி, தாணுமாலய பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.