துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப...
குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிா்கள் அறுவடை சாஸ்தா கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நெற்கதிா்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, மூலஸ்தான மண்டபத்தில் அம்மன் பாதத்தில் நெற்கதிா் படைக்கப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அம்மனுக்கு தங்கக் கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தாா்.
இந்த பூஜைகளை கோயில் மேல்சாந்திகள் நடத்தினா். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு நெற்கதிா்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு, பின்னா் அந்த நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், குமரி மாவட்ட அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ராமகிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், பக்தா்கள் சங்க நிா்வாகி எஸ்.வைகுண்டபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.