குமரி மாவட்டத்தில் விதிமீறல்: 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாலை விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை, அதிவேகமாக, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக என விதிகளை மீறி இயக்கப்பட்ட 48 கனரக வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை தொடா்ந்து நடத்தப்படும் என்றும், விபத்துகள் ஏற்படாமலிருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.