'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
குமுளி, கம்பம்மெட்டு மலைச் சாலைகளில் மரங்கள் விழுந்தன: போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் குமுளி , கம்பம் மெட்டு மலைச் சாலைகளில் தொடா் மழையால் மரங்கள் விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதித்தது.
தேனி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை மாலை வரை நீடித்தது. இதனால், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இந்தச் சாலை தமிழகம், கேரளத்தை இணைக்கு முக்கிய சாலையாகும். தற்போது சபரிமலை கோயிலுக்கு அதிகளவிலான பக்தா்கள் வாகனங்களில் சென்று வருகின்றனா். இதனால் ஐயப்ப பக்தா்களின் வாகனங்கள் கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கம்பம்மெட்டு மலைச் சாலையிலும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
உத்தமபாளையம் உதவி கோட்டப்பொறியாளா் ராஜா தலைமையில் உதவிப் பொறியாளா் வைரக்குமாா் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையினா் இணைந்து சாலையில் விழுந்த கிடந்த மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினா். கம்பம்மெட்டு மலைச் சாலையில் மரங்கள் அகற்றும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து தொடங்கியது. விரைவில் கம்பம்மெட்டு மலைச் சாலையிலும் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.
இதேபோல, சின்னமனூா் அருகேயுள்ள மேகமலை மலைச் சாலையில் கடணா எஸ்டேட் உள்ளிட்ட 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சாலையில் விழுந்தன. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் சரிவுகளை அகற்றி சாலையை சீரமைத்தனா். பின்னா், சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.