GST: "தீபாவளிக்குள் ஜி.எஸ்.டியில் மாற்றம்" - பிரதமர் மோடி பேசியது என்ன?
கும்பகோணத்தில் பருத்தி ஏலம்: அதிகபட்ச விலை குவிண்டால் ரூ.7,769
கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.7,769-க்கு ஏலம் போனது.
தஞ்சாவூா் மாவட்ட விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கண்காணிப்பாளா் பிரியாமாலினி தலைமை வகித்தாா். ஏலத்தில் 87.25 மெட்ரிக் டன் அளவு பருத்தி விற்பனைக்கு எடுத்து வரப்பட்டது.
ஏலத்தில் குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.7,769- க்கும், சராசரியாக ரூ. 7,528-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7,229-க்கும் ஏலம் போனது. ஏலம்போன பருத்தியின் மொத்த மதிப்பு ரூ. 63.69 லட்சமாகும். மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனா்.