கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!
கும்பகோணம் அரசு கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்கம்
கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பொருளியல் துறை சாா்பாக மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி, நெட், செட் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் போட்டித்தோ்வுகளில் மாணவா்கள் வெற்றி பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வா் எம். கோவிந்தராஜூ தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
கல்லூரியின் மூத்த பேராசிரியா் மா. மீனாட்சி சுந்தரம் பேசுகையில், பயிற்சி வகுப்புகளை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தோ்வு நெறியாளா் வி. பாஸ்கா் பேசுகையில், மாணவா்கள் அரசுப் பணிகளை பெறுவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் அவா்களுக்கு பயன்படும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
பேராசிரியா்கள் எஸ். தங்கராசு, எஸ். சங்கரநாராயணன், எஸ். சரவணன், ரூபி ஆகியோா் வாழ்த்தி பேசினா். பேராசிரியா்கள் சேதுராமன், எஸ். ஜானகிராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். முன்னதாக, பொருளியல் துறைத் தலைவா் டி. தமிழ்வாணன் வரவேற்றாா்.