செய்திகள் :

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

post image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 25 ஆம் தேதி கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள இரவு உணவகத்தில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜூபிஷ்வர்மா (35) என்பதும், அவரே குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின் பூந்தமல்லி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜூ பிஷ்வர்மாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

odisha youth involved in the sexual assault of a minor girl in Gummidipoondi produced before the Thiruvallur POCSO court today

இதையும் படிக்க : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியைத் தொடங்கிவைத்து அந்த கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை உரையாற்றினார்.சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ’ம... மேலும் பார்க்க

கீழடியில் எடப்பாடி பழனிசாமி!

கீழடி அருங்காட்சியத்தை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டார்.“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 26 -ல் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்துக்கு வருகைதரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார்.மே... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3 ஆவது நாளாக உறவினர்கள் மறுப்பு

கே.டி.சி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் உடலை வாங்க 3 ஆவது நாளாக அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித் மீது குண்டாஸ் வழக்குப் பதி... மேலும் பார்க்க

மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!

காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.அஜித்குமாரின் தாய், சகோதரர் நவீன்குமா... மேலும் பார்க்க

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்: அரசு கல்லூரிகளில் 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

அரசுக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்குகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க