பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசன...
`குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் ஜாஸ்மீன் ' - புனிதப்படுத்த சடங்கு
பியூட்டி & லைஃப் ஸ்டைல் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் ஜாஸ்மீன் ஜாபர். மலையாள பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு மூன்றாமிடம் பிடித்து செய்திகளிலும், ஊடகங்களிலும் வைரலானவர்.
தொடர்ந்து சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பதிவுகள், Vlog பதிவுகள் மூலம் இயங்கி வருபவர்.
இவர் சமீபத்தில் குருவாயூர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கோயிலில் சில ரீல்ஸ்களையும் எடுத்திருக்கிறார். அதில் ஒரு ரீல்ஸ், குருவாயூர் கோயிலின் குளத்தில் கால் வைத்திருப்பது போன்ற வீடியோ. அது சமூக ஊடகங்களில் வைரலானது.

ஜாஸ்மின் தான் எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால் உடனே அந்த வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதோடு தனது செயலுகாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். கோயில் நடைமுறைகள் தனக்கு தெரியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, "உயர் நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறி கோயில் குளம் மற்றும் நடப்புரா (வெளிப்புற முற்றம்) உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆராட்டு, தெய்வச் சடங்கு குளியல் போன்ற சடங்குகளுக்கு குளம் பயன்படுத்தப்படுவதால் அந்தக் குளம் மத முக்கியத்துவம் வாய்ந்தது" என ஜாஸ்மீன் ஜாபர் மீது குருவாயூர் தேவஸ்தான வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

அதைத் தொடர்ந்து, ``செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் குருவாயூர் கோயில் குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு (புண்யாஹம்) நடைபெறும்.
முதல் பதினெட்டு பூஜைகள், பதினெட்டு 'ஸ்ரீவேலிகள்' திட்டமிடப்பட்டு, ஆறு நாள்கள் சடங்குகள் நடைபெறும்" என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை 5 மணிக்கு இந்த புனிதப்படுத்தும் சடங்குகள் தொடங்கியது. இதையடுத்து இன்று காலையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இன்று மாலை 5 மணிக்குபிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...