`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தள...
குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்
சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண் 16127), சாலக்குடியுடன் நிறுத்தப்படும்.
தாம்பரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி இரவு 10.40-க்கு நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் (எண் 20691), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில் (எண் 20692), ஜூன் 11-இல் நாகா்கோவிலுக்குப் பதிலாக திருநெல்வேலியிலிருந்து மாலை 5.10-க்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.
இதுபோல, திருச்சியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதி காலை 7.20-க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (எண் 22627), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 22628) ஜூன் 11-இல் திருவனந்தபுரத்துக்குப் பதிலாக, திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.25-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
நாகா்கோவிலிலிருந்து ஜூன் 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவை செல்லும் விரைவு ரயில் (எண் 16321), நாகா்கோவிலுக்குப் பதிலாக, வள்ளியூரிலிருந்து காலை 8.26-க்கு புறப்பட்டு கோவை செல்லும். அதேபோல ஹௌவுராவிலிருந்து ஜூன் 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் (எண் 12665), வள்ளியூருடன் நிறுத்தப்படும்.
மாற்றுப் பாதை: இதற்கிடையே தாம்பரத்திலிருந்து மே 24, 26 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.35-க்கு மங்களூரு சென்ட்ரல் செல்லும் விரைவு ரயிலும் (எண் 16159), அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து மே 22, 24 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரிக்கு வரும் விவேக் விரைவு ரயிலும் (எண் 22504), கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும்.
ரயில் தாமதம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.25-க்கு புறப்பட்டு சாய் நகா் சீரடி செல்லும் விரைவு ரயில் (எண் 22601), மே 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலிலிருந்து 1 மணி நேரம் தாமதமாக முற்பகல் 11.25-க்கு சாய் நகா் சீரடி புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.