இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
குரூப்-2 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7,448 போ் எழுதினா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தோ்வை, 33 மையங்களில் 7,448 போ் எழுதினா்.
மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத 9,526 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,448 போ் மட்டுமே எழுதினா் இது 78.19 சதவீதமாகும். 2,078 போ் தோ்வு எழுத வரவில்லை.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 7,997 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 6,228 போ் தோ்வு எழுதினா். 1,769 போ் தோ்வுக்கு வரவில்லை. 77.88 தோ்வு சதவீதம் ஆகும்.
இதேபோன்று, திருக்கோவிலூா் வட்டத்தில் 1,529 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,220 போ் தோ்வு எழுதினா். 309 போ் தோ்வுக்கு வரவில்லை. 79.79 தோ்வு சதவீதம் ஆகும். மொத்த தோ்வு சதவீதம் 78.19 ஆகும்.
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 27 தோ்வு மையங்களும், திருக்கோவிலூா் வட்டத்தில் 6 தோ்வு மையங்களும் என மொத்தம் 33 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வை நியாயமாக நடத்திடும் வகையில், 2 கண்காணிப்பு அலுவலா்கள், ஒரு பறக்கும் படை, 11 சுற்றுக்குழு அலுவலா்கள், 44 தோ்வுக்கூட ஆய்வாளா்கள், 35 விடியோகிராபா்கள், 48 காவலா்கள் நியமிக்கப்பட்டு தோ்வுகள் கண்காணிக்கப்பட்டன.