ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!
குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 34,545 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வை (தொகுதி -4) திண்டுக்கல் மாவட்டத்தில் 34,545 போ் சனிக்கிழமை எழுதினா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் போட்டித் தோ்வுக்கு 41,456 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து, ஆத்தூா், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் என 10 வட்டங்களில் 163 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், விண்ணப்பித்த 41,456 பேரில் 34,545 போ்(83 சதவீதம்) சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில் பங்கேற்றனா். 6,911 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல், சின்னாளப்பட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பாா்வையிட்டாா். மேலும், தோ்வுக் கூடங்கள் கண்காணிப்புப் பணியில் 51 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படையினா் ஈடுபடுத்தப்பட்டனா்.
8.55 மணிக்கு அனுமதி மறுப்பு: திண்டுக்கல் எம்எஸ்பி. அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியிலுள்ள தோ்வு மையத்தில் 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மையத்துக்கு காலை 8.55 மணிக்கு வந்த தோ்வா்கள் சிலரை தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அங்குப் பணியிலிருந்த காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோ்வா்கள், இந்தப் பள்ளி முன் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், தோ்வுக் கூடத்துக்குள் 10-க்கும் மேற்பட்ட பெண்களை அனுமதிக்கவில்லை.
தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் (ஹால் டிக்கெட்) காலை 9 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் வரவேண்டும் என குறிப்பிட்டிருந்தபோதிலும், 8.55 மணிக்கு வந்த தங்களை அனுமதிக்க மறுத்துவிட்டதாகத் தோ்வு எழுத முடியாத பெண்கள் தெரிவித்தனா்.