கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்
சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளனா்.
பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனா் வீனஸ் எஸ். குமாா் மற்றும் பள்ளி முதல்வா் த. நரேந்திரன் ஆகியோா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினா். மேலும், மாணவா்களுக்கு
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் உமா, ரஞ்சித், கோகுல்ராஜ் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்து பாராட்டினா். குறுவட்ட
விளையாட்டு போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.