குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தச் சான்றளிப்புத் திட்டம் மூலம் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பழுதை கணிசமாகக் குறைத்தல், உற்பத்தியை அதிகரித்தல், ஆற்றலைச் சேமித்தல், இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல், சந்தைகளை விரிவுபடுத்துதலை மேற்கொள்ள முடியும்.
மேலும் மதிப்பீடு, வழிகாட்டுதல் மூலம் மாற்றம் செய்தல், நேரடி வழிகாட்டுதல் , தொழில்நுட்பத் தலையீடுகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிறுவனங்களுக்கு பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தியை ஊக்குவித்து, சாதனையாளா்களாக உருவாக உந்துதலை அளிக்கவும், நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிப். 25 மாலை 4 மணியளவில் விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பெரம்பலூா் மாவட்ட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம்.