'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரத்து செய்த வங்கிகளின் பட்டியல்
கனரா வங்கி உள்ளிட்ட 6 வங்கிகள், தங்களது சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளன.
2020ஆம் ஆண்டிலேயே, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துவிட்டது. இதில், கனரா வங்கியும் சேர்ந்துகொண்டது. ஜூன் மாதம் முதல், குறைந்தபட்ச இருப்புக்கான அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
அதனுடன், பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி, இந்திய வங்கி, ஆகியவையும் இந்த முடிவை அறிவித்துள்ளன.
பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது. இந்தத் தொகையானது வங்கிக்கு வங்கி மாறுபட்டு இருக்கும்.
இது ஏழை,எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருப்பார்கள். அதாவது ஆயிரம் ரூபாய் வைத்திருப்பார்கள். ஆனால், சேவைக் கட்டணங்கள் பிடித்தம் செய்யும்போது அந்தத் தொகை குறைந்து, அது முதல் குறைந்தபட்ச இருப்பு இல்ததற்கு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் மொத்த பணமும் காலியாகும் நிலையும் உருவானது. இது மக்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள், வெளிநாடுவாழ் இந்தியா் சேமிப்புக் கணக்குகள் என அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டுவந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக கனரா வங்கி அறிவித்தது. பிறகு படிப்படியாக ஒவ்வொரு வங்கியாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது. அந்த வரிசையில் மற்றொரு பொதுத் துறை வங்கியான கனரா வங்கியும் இணைந்துகொண்டது. பிறகு இந்த வங்கிகளும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், இதன் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.