ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு
பரமக்குடி அருகே குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா்.
பரமக்குடி நகராட்சி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் கதிரேசன் (42). இவா் சம்பவத்தன்று விவசாயப் பணிகளை முடித்து விட்டு, ஊரின் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா். அப்போது குளத்தில் தவறி விழுந்த அவா் தண்ணீரில் மூழ்கினாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடி குளத்துக்குச் சென்றனா். அப்போது நீரில் மூழ்கி இறந்து கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.